2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தில் (IATA) உறுப்பினராகியுள்ளது.
உலகளவில் சுமார் 360க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற IATA அமைப்பு உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 80% பங்கிற்கும் அதிகமானவற்றை நிர்வகிக்கிறது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆகாசா IATA செயல்பாட்டுப் பாதுகாப்புத் தணிக்கையில் (IOSA) தேர்ச்சி பெற்றது.
இந்தியாவில் இப்போது ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய ஐந்து IATA உறுப்பினர் விமான நிறுவனங்கள் உள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் 226 போயிங் 737 MAX விமானங்களை இயக்க ஆகாசா திட்டமிட்டுள்ளது என்பதோடு மேலும் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த விமான நிறுவனமாக மாறுவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.