இலங்கையுடன் ஆகாய விமானப் போக்குவரத்து (Air bubble) ஒப்பந்தத்தை இந்திய அரசானது இறுதி செய்துள்ளது.
இது தகுதியான அனைத்துப் பயணிகளையும் இரு நாடுகளுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கும்.
இந்தியா இலங்கையுடனான ஆகாய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை இறுதி செய்ததின் மூலம் இது சார்க் பிராந்தியத்தில் இது போன்ற 6வது ஏற்பாடாகவும், மொத்தத்தில் இது போன்ற 28வது ஏற்பாடாகவும் இது அமைந்துள்ளது.
ஒரு இருதரப்பு ஆகாய விமானப் போக்குவரத்து ஒப்பந்தமானது பெருந்தொற்றின் போது முன்நிபந்தனைகளுடன் இரு நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தைத் தடையற்ற வகையில் தொடர்வதற்கான ஒரு வழிமுறையாகும்.