TNPSC Thervupettagam
December 27 , 2025 6 days 82 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ்-NG எறிகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டுச் சோதனைகளை (UET) நிறைவு செய்துள்ளது.
  • ஆகாஷ்-NG (அடுத்த தலைமுறை நுட்பம்) என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நிலப்பரப்பிலிருந்து வானில் ஏவப்படும் எறிகணையாகும்.
  • இது விமானம், ஆளில்லா விமானங்கள் மற்றும் சீர்வேக எறிகணைகளை அழிக்கப் பயன்படுகிறது.
  • இலக்குகளை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க இந்த எறிகணையில் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட ரேடியோ அதிர்வெண் (RF) உணர்வி உள்ளது.
  • இது நீண்ட தூரச் செயல்பாடுகள் மற்றும் விரைவான செயல்பாட்டிற்காக இரட்டை உந்துதல் கொண்ட திட எரிபொருள் சார்ந்த ஏவு அமைப்பு மோட்டாரைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்