TNPSC Thervupettagam

ஆகாஷ் எம்கே–1 எஸ்

May 29 , 2019 2260 days 733 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (Defence Research and Development Organisation - DRDO) ஒடிசாவின் சந்திப்பூரிலிருந்து ஆகாஷ் எம்கே–1 எஸ் என்ற ஒரு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • ஆகாஷ் எம்கே–1 எஸ் என்பது மேம்படுத்தப்பட்ட வான்பரப்பு இலக்குகளைச் சீராக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். இது நிலப்பரப்பிலிருந்து வான் பரப்பிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காக ஏவப்படுகின்றது.
  • இந்த மீயொலி வேகம் கொண்ட ஏவுகணையானது 25 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இது 18,000 மீட்டர் உயரம் வரை சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும்.
  • மேம்படுத்தப்பட்ட துல்லியத் தன்மை மற்றும் அதிக வரம்பு கொண்ட இந்த வகையைச் சேர்ந்த பிற ஏவுகணைகளான ஆகாஷ் எம்கே–1, ஆகாஷ் எம்கே–2 ஆகியவை DRDOவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்