முக்கியமான ஆக்ஸிஜன் தொடர்பான வினையூக்க எதிர்வினைகளை வேகமாகவும், மலிவு விலையிலும், திறன் மிக்க முறையிலும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய வினையூக்கியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் பெங்களூருவின் நுண் மற்றும் மென்மையான பொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது ஆக்ஸிஜன் தொடர்பான மின்னாற்பகுப்பு எதிர்வினைகளை மேம்படுத்துகிறது.
இந்த வினையூக்கி தூய்மையான ஆற்றல் தொழில்நுட்பங்களின் செயல்திறன் மற்றும் மலிவு விலையிலான தன்மையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வழக்கமான வினையூக்கிகள் பெரும்பாலும் விலையுயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற சில உலோகங்களைச் சார்ந்துள்ளன என்பதோடு அவை செலவு மற்றும் செயல்திறன் சவால்களை ஏற்படுத்துகின்றன.
இரும்பு இணைவு கொண்ட நிக்கல் செலினைடைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய வினையூக்கியானது, இந்த சிக்கல்களை திறம்பட நிவர்த்தி செய்வதாக உறுதி அளிக்கிறது.
மின்னாற்பகுப்பு தூய்மையான ஆற்றல் பயன்பாடுகளுக்கு மிக முக்கியமானதாகும்.
ஹைட்ரஜன் உற்பத்திக்கான நீர் பிரிப்பு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்களின் தொகுப்பு போன்றச் செயல்முறைகளில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆராய்ச்சிக் குழுவானது உலோக-கரிம கட்டமைப்புகளுடன் (MOFs) இந்த செயல்முறை அமைப்பினைத் தொடங்கியது.
இந்தப் பொருட்களானது வேதியியல் எதிர்வினைகளுக்கு ஏற்றவாறு நல்ல நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன ஆனால் அவை மின் கடத்துத் திறனைக் கொண்டிருக்க வில்லை.