TNPSC Thervupettagam

ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணம்

June 28 , 2025 6 days 49 0
  • குழுத் தலைவர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • 1984 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணித்து, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெரும் பெருமையினைப் பெற்றவர் ராகேஷ் சர்மா ஆவார்.
  • சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான (ISS) ஆக்சியம் 4 விண்வெளிப் பயணத்தின் (ஆக்ஸ்-4) ஒரு பகுதியாக பங்கேற்றுள்ளார்.
  • இது புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ஏவுகலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • ஆக்சியம் 4 விண்வெளிப் பயணத்தில் ஆக்சியம் ஸ்பேஸ், நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
  • இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன.
  • இக்குழுவினர் விண்வெளியில் 14 நாட்கள் வரை தங்கி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வார்கள்.
  • ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம் என்பது தனியார் விண்வெளி வீரர்களின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான  நான்காவது பயணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்