ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் ஆனது "rage bait" என்பதை 2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக பெயரிட்டது.
இதன் பொருள் ஈடுபாட்டை அதிகரிக்க மக்களை கோபப்படுத்தவோ அல்லது சீண்டுவதற்கோ வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட இயங்கலை உள்ளடக்கம் ஆகும்.
இந்தச் சொல்லானது 2002 ஆம் ஆண்டு முதல் இயங்கலையில் பயன்பாட்டில் இருந்தது என்பதோடு முதலில் யூஸ்நெட்டில் இருந்த இந்தச் சொல் முதலில் வாகனம் ஓட்டும் போது வேண்டுமென்றே எழுப்பப்படும் கிளர்ச்சி என்பதை விவரிக்கிறது.
"rage bait" என்பது இயங்கலை உள்ளடக்கம் மற்றும் படிமுறைகள் உணர்ச்சிகளையும் நடத்தையையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலியுறுத்துகிறது.