நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஆசாத் ஹிந்த் அரசின் 75வது ஆண்டின் நினைவாக அக்டோபர் 21 அன்று பிரதம அமைச்சர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
பாரம்பரியமாக பிரதம அமைச்சர் சுதந்திர விழாவான ஆகஸ்ட் 15 அன்று வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றுவார்.
1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று நாட்டின் முதலாவது சுதந்திர அரசாங்கமான ‘ஆசாத் ஹிந்த் அரசாங்கம்’ உருவானதை போஸ் அறிவித்தார்.
இது 1940 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக அச்சு நாடுகளுடன் (Axis Powers) இணையும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வெளியே உருவான விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.