சுமார் 144 காடுகளில் வளரக் கூடிய மற்றும் பயிரிடப்பட்ட அரிசி வகைகளின் மரபணு தரவுகளை உள்ளடக்கிய முதல் ஆசிய அரிசி வகைகளின் முதல் விரிவான மரபணு தரவினை (ஒட்டு மொத்த மரபணுப் பெருக்கத்தின் ஒரு விரிவான தரவுகள்) சீன நாட்டு அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அரிசி வகைகளின் இந்த தரவு ஆனது, ஆராய்ச்சியாளர்கள் புதிய பயிரின வகைகளை உருவாக்குவதற்கும், நோய்க்கு எதிரான தாங்குத்தன்மை மற்றும் பருவநிலை குறித்த தாக்குதல்களுக்கு எதிரான மீள்தன்மைக்கான பல்வேறு புதிய பண்புகளை அறிமுகப் படுத்துவதற்கும் அனுமதிக்கிறது.
ஆசிய பயிரிடப்பட்ட அரிசி (ஒரைசா சட்டைவா L.) ஆனது O.ருஃபிபோகன் எனும் ஒரு காட்டில் வளரக் கூடிய அதன் முன்னோடி இனத்திலிருந்து பெறப்பட்டது.
ஒரைசா-IIIa என்பது O.ருஃபிபோகன் இனத்தின் ஒரு மாறுபாடு ஆகும்.