ஆசிய இளையோர் மற்றும் ஜுனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்
May 14 , 2018 2548 days 905 0
உஸ்பெகிஸ்தான் நாட்டில் உர்கென்ச் (Urgench) நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் மற்றும் ஜுனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் (Asian Youth and Junior Weightlifting Championship) இந்திய பளுதூக்குதல் வீரரான ஜெரேமி லால்ரின்னுங்கா (Jeremy Lalrinnunga) ஜுனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும், இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
இரு போட்டிகளிலும் மொத்தம் 250 கிலோ கிராம் எடையைத் தூக்கியதன் மூலம் 15 வயதான ஜெரேமி லால்ரின்னுங்கா இளையோர் மற்றும் ஜுனியர் பளுதூக்குதல் போட்டியில் இரு புதிய தேசிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் சிறுவர்கள் இளையோர் பிரிவில் (Youth Boys section) 243 கிலோ கிராம் எடையைத் தூக்கி பதினான்கு வயதான இந்தியாவின் சிந்தான்த் கோகோய் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
மேலும் இப்போட்டியில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த இரு பெண் பளுதூக்கும் வீராங்கனைகளான, ஜில்லி தலாபேஹேரா ஜுனியர் பெண்கள் பிரிவில் 166 கிலோ கிராம் பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தினையும், சினேஹா சோரென் இளையோர் பெண்கள் பிரிவில் 145 கிலோ கிராம் பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.