TNPSC Thervupettagam

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2025

August 18 , 2025 2 days 35 0
  • தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் (U19) மற்றும் 22 வயதுக்குட்பட்டோருக்கான (U22) ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இந்தியா 27 பதக்கங்களைப் பெற்றது.
  • U19 அணி 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • U22 அணி 1 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களைப் பெற்றது.
  • ரித்திகா, மகளிருக்கான 80-க்கும் மேலான கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கம் வென்றார் மற்றும் U22 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே நபர் ஆவார்.
  • மற்ற பதக்கம் வென்ற வீரர்கள் : யாத்ரி படேல் (மகளிர் 57 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளி), பிரியா (பெண்கள் 60 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளி), நீரஜ் (ஆடவர் 75 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளி), மற்றும் இஷான் கட்டாரியா (ஆடவர் 90-க்கும் மேலான கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளி).

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்