ஆசிய சாலை பாரா - மிதிவண்டி ஓட்டுதல் சாம்பியன் 2019
May 3 , 2019 2337 days 833 0
ஆசிய சாலை பாரா - மிதிவண்டி ஓட்டுதல் சாம்பியன் ஆனது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் 28 நாடுகளின் பங்கேற்புடன் நடத்தப் பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த பாரா-மிதிவண்டி ஓட்டுநர்கள் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
திவ்ஜி ஷா C5 பிரிவில் தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவரான குர்லால் சிங் ஆசிய அளவிலான விளையாட்டுகளில் C4 பிரிவில் வெண்கலத்தை வென்ற முதல் மிதிவண்டி ஓட்டுநராகியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கை மிதிவண்டி ஓட்டுநரான சுதாகர் மராத்தே H5 பிரிவில் இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.