2020 ஆம் ஆண்டில் 674 ஆக இருந்த இந்தியாவின் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை ஆனது 2025 ஆம் ஆண்டில் 891 ஆக அதிகரித்துள்ளது என்பதோடு இது 32.2% வளர்ச்சியைக் குறிக்கிறது.
260 ஆக இருந்த வளர்ச்சியடைந்த பெண் சிங்கங்களின் எண்ணிக்கையானது 330 ஆக உயர்ந்து, இனங்களின் இனப்பெருக்க வலிமையை 27% மேம்படுத்தியுள்ளது.
மொத்தம் 497 சிங்கங்கள் தற்போது குஜராத்தில் உள்ள ஒன்பது பிராந்தியங்களில் சிறுசிறு குழுவாக வாழ்கின்றன.
முதல் முறையாக, குஜராத்தின் வழித்தடப் பகுதிகளில் 22 சிங்கங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்தக் காலக் கட்டத்தில் அவற்றின் வாழ்விடப் பரவல் வரம்பு சுமார் 60% விரிவடைந்து உள்ளது.
குஜராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் 82 வளர்ச்சியடைந்த ஆண் சிங்கங்கள், 117 வளர்ச்சியடைந்த பெண் சிங்கங்கள் மற்றும் 79 குட்டிகள் உள்ளன.
மிடியாலா வனவிலங்கு சரணாலயத்தில் (குஜராத்) 100% வேகமான அதிகரிப்பு பதிவானது, அதைத் தொடர்ந்து பாவ்நகர் பிரதான நிலப்பகுதியில் 84% அதிகரிப்பு பதிவானது.
கிர்னார் வனவிலங்கு சரணாலயம் (குஜராத்) மற்றும் பாவ்நகர் கடற்கரை (குஜராத்) ஆகியவற்றில் முறையே 4% மற்றும் 12% சரிவு பதிவாகியுள்ளன.