- ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பானது 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கின்றது.
- கிர் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயம் ஆகியவை அடங்கிய ஆசிய சிங்கங்கள் வாழும் பகுதியில் குஜராத் வனத் துறையானது இந்த சிங்கக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
- இந்தக் கணக்கெடுப்பானது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை இந்திய வன விலங்கு நிறுவனத்தினால் நடத்தப் படுகின்றது.
- இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்காக அந்நிறுவனம் 10,000 ஒளிப்பட கருவிகளைப் பயன்படுத்த இருக்கின்றது.

ஆசிய சிங்கம் பற்றி
- இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு தரவுப் பட்டியலின் கீழ் ‘ஆபத்தான இனமாகப்’ பட்டியலிடப்பட்டுள்ளது.
- இது வனவிலங்கு (பாதுகாப்புச்) சட்டம், 1972ன் அட்டவணை - 1ல் பட்டியலிடப் பட்டுள்ளது.
- எஞ்சியிருக்கும் ஆசிய சிங்கங்கள் குஜராத்தில் உள்ள கிர் காட்டில் மட்டுமே உள்ளன.
- 2015 ஆம் ஆண்டு சிங்கங்கள் குறித்த கணக்கெடுப்பின் படி, இங்கு 523 ஆசிய சிங்கங்கள் உள்ளன.
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு தரவுப் பட்டியலின் கீழ் ஆப்பிரிக்க சிங்கங்கள் “பாதிக்கப்படக் கூடிய” இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.
ஆசிய சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம்
- இந்த 3 ஆண்டுத் திட்டமானது (2018/2021) மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தால் தொடங்கப் பட்டுள்ளது.