40வது ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு (AWC) மற்றும் 60வது சர்வதேச நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு (IWC) ஆனது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் 11 ஆம் தேதிகள் வரை நடைபெறும்.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொரிங்கா வனவிலங்கு சரணாலயம் மற்றும் அருகிலுள்ள ஈரநிலங்களில் நடைபெறும்.
இது பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS), இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) ஆகியவற்றுடன் இணைந்து ஆந்திரப் பிரதேச வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோதாவரி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கொரிங்கா வனவிலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட பத்தாவது நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு இதுவாகும்.
இந்தக் கணக்கெடுப்பு இந்திய நீர்க் கிழிப்பான் (அருகி வரும் இனம்), பெரிய உள்ளான் (அருகி வரும் இனம்), யூரேசிய அரிவாள் மூக்கு உள்ளான் (அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்) மற்றும் யூரேசிய சிப்பி பிடிப்பான் (கிளிஞ்சல் கொத்தி) ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
கொரிங்கா என்பது குளிர்காலத்தில் இந்திய நீர்க் கிழிப்பான் மற்றும் பெரிய உள்ளான் பறவைகள் ஒன்றாகக் காணப்படும் ஓர் அரிய தளமாகும்.