ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் NABCB-க்கு அங்கீகாரம்
January 8 , 2019 2401 days 692 0
இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பான NABCB ஆனது ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள OHSMS சான்றிதழ் அளிக்கும் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டத்திற்கு சமமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
சான்றளிப்பு மையங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் – (National Accreditation Board for Certification Bodies - NABCB)
தொழில் சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு மேலாண்மை அமைப்பு (Occupational Health and Safety Management Systems - OHSMS).
இது பசிபிக் அங்கீகார ஒத்துழைப்பின் பல்முனை அங்கீகார ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
இது சர்வதேச அமைப்புகளுக்கு சமமான அமைப்புகளின் கீழ் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப சான்றிதழ் வழங்கும் அல்லது ஆய்வு மேற்கொள்ளும் அமைப்புகளின் அங்கீகாரத்திற்கு பொறுப்புடைய இந்திய தரக் குழுமத்தின் ஒரு அங்கமாகும்.
NABCB ஆனது தகுதி வாய்ந்த சான்றளிப்பு அமைப்புகளின் மூலமாக சர்வதேச தர நிலைப்படி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதிபடுத்துவதன் மூலம் உலக சந்தையில் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவுகிறது.
இது ஹாங்காங் மற்றும் மெக்ஸிகோவின் அங்கீகார அமைப்புகளுக்கு அடுத்ததாக ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் அங்கீகரிக்கப்பட்ட 3வது அமைப்பாகும்.