TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2025

November 6 , 2025 15 hrs 0 min 4 0
  • தென் கொரியாவின் கியோங்ஜூவில் 21 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பு நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருடாந்திர உச்சி மாநாட்டை நிறைவு செய்தனர்.
  • வர்த்தகம் சார்ந்தப் பதட்டங்களைத் தணிக்க ஒப்புக் கொண்ட அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.
  • APEC தலைவர்கள் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பை வலியுறுத்தியும் உலகளாவிய வர்த்தகச் சவால்களை ஒப்புக் கொண்டும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
  • தடையற்ற/சுதந்திரமான, வெளிப்படையான, நியாயமான, பாகுபாடற்ற மற்றும் கணிக்கக் கூடிய வர்த்தகச் சூழலை ஊக்குவிக்கும் புத்ராஜெயா தொலைநோக்கு 2040 கொள்கையை உறுப்பினர்கள் நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின.
  • இந்த உச்சி மாநாடு ஆனது செயற்கை நுண்ணறிவு, மக்கள்தொகை சார்ந்த சவால்கள் மற்றும் கலாச்சாரத் தொழில்துறைகள் குறித்த ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தது.
  • 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட APEC, தடையற்ற மற்றும் திறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்