ஆசிய மேம்பாட்டு வங்கியானது இந்த அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையானது 2021 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் ஆசிய நாடுகளுக்கான வளர்ச்சிக் கணிப்பினைக் குறைத்துள்ளது.
ஓமைக்ரான் எனும் புதிய கொரோனா வைரஸ் மாற்றுரு ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு ஏற்ப இந்த மாற்றமானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஆசிய மேம்பாட்டு வங்கியானது, வளர்ந்த ஆசிய நாடுகளில் முன்பு கணிக்கப்பட்ட 7.1% என்ற மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பதிலாக 7.0% வளர்ச்சியைக் குறிப்பிட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டில் 5.3% வளர்ச்சி இருக்குமெனக் கணிக்கப் பட்டுள்ளது.