TNPSC Thervupettagam

ஆசிய மேம்பாட்டுக் கண்ணோட்ட அறிக்கை 2021

May 10 , 2021 1547 days 635 0
  • ஆசிய மேம்பாட்டுக் கண்ணோட்ட அறிக்கை 2021 என்பது ஆசிய மேம்பாட்டு வங்கியினால் வெளியிடப்படும் ஒரு அறிக்கையாகும்.
  • உலகின் ஆரோக்கியமான மீள்வு மற்றும் கோவிட் – 19 தடுப்பூசி உற்பத்தியில் ஏற்பட்ட ஆரம்ப கால வளர்ச்சி போன்றவற்றினால் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் தவிர 45 நாடுகளின் வளர்ச்சியானது இந்த ஆண்டில் 7.3% அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • தடுப்பூசி விநியோகத்தில் ஏற்படும் தாமதம் (அ) புதிய தொற்றுகள் ஏற்படுவதின்  காரணமாக இந்த பெருந்தொற்றானது ஆசியாவிற்கும் பசிபிக் பகுதிக்கும் (இந்தியா உட்பட) ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.
  • இந்த பகுதிகளில் 2020 ஆம் ஆண்டில் 2.8% ஆக இருந்து சராசரி பணவீக்கமானது 2021 ஆம் ஆண்டில் 2.3% ஆகக் குறையும் எனக் கணிக்கப் பட்டது.
  • கிழக்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் வலுவான வளர்ச்சியும், மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் பசிபிக் பகுதிகளிலும் பெரும்பாலும் மிதமான வளர்ச்சியும் ஏற்படும் என இதில் கணிக்கப் பட்டுள்ளது.
  • கோவிட் – 19 பெருந்தொற்றின் தற்போதைய இரண்டாவது அலையானது இந்தியப் பொருளாதாரத்தின் மீள்வினை ஆபத்தான சூழ்நிலையில் ஆழ்த்தக் கூடும் என இந்த அறிக்கை கூறுகிறது.
  • வலுவான தடுப்பூசி வழங்கும் இயக்கமானது நடப்பிலிருப்பதால் இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது ஒருவேளை இல்லாதிருந்தால் இந்தியாவின் பொருளாதாரமானது 2021-22 ஆம் நிதி ஆண்டில் 11% வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப் பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 7% வரை வளரும் என எதிர்பார்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்