ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான புதிய தலைமைப் பிரதிநிதி - BIS
November 19 , 2018 2431 days 739 0
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கியானது (BIS - Bank for International Settlements) சித்தார்த் திவாரியை ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமைப் பிரதிநிதியாக நியமித்துள்ளது. இதற்குமுன் எலி ரிமோலோனா இப்பதவியை வகித்தார்.
ஹாங்காங்கின் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள BIS-ன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான அலுவலகத்தில் சித்தார்த் பணியாற்றுகிறார்.
இவர் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பை அதிகப்படுத்த பணியாற்றவிருக்கிறார்.
BIS என்பது சர்வதேச நாணய மற்றும் நிதியியல் ஒத்துழைப்பை ஏற்படுத்த மத்திய வங்கிகளால் நிர்வகிக்கப்படும் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும். மேலும் BIS ஆனது மத்திய வங்கிகளுக்கு வங்கியாக செயல்படுகிறது.