ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான FAO-ன் பிராந்தியக் கருத்தரங்கு
September 13 , 2020 1807 days 651 0
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO - Food and Agriculture Organization) பிராந்தியக் கருத்தரங்கின் 35வது அமர்வானது பூடானின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான 36வது பிராந்தியக் கருத்தரங்கை வங்க தேசமானது 2022 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
தற்பொழுது முதன்முறையாக 1973 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இணைந்த ஒரு நாடாக இந்தக் கருத்தரங்கை பூடான் நடத்தவுள்ளது.
பிராந்தியக் கருத்தரங்கானது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது.
முதலாவது பிராந்தியக் கருத்தரங்கானது 1953 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பெங்களூருவில் நடத்தப்பட்டது.