ஆசியான்-இந்தியா இடையிலான பயணக் கப்பல் சுற்றுலா தொடர்பான பேச்சு வார்த்தை
July 6 , 2025 3 days 28 0
கடல்சார் உறவுகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா தனது முதல் ஆசியான்-இந்தியா பயணக் கப்பல் சுற்றுலா தொடர்பான பேச்சு வார்த்தையினை சென்னையில் நடத்துகிறது.
இந்திய-பசிபிக் பகுதியில் கப்பல் போக்குவரத்து இணைப்பு, நிலையான சுற்றுலா மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தப் பேச்சுவார்த்தை ஒரு கவனம் செலுத்தியது.
2029 ஆம் ஆண்டிற்குள் சுமார் 5,000 கிலோ மீட்டர் நீர்வழிகளை உருவாக்கி, கப்பல் போக்குவரத்துப் பயணிகளின் எண்ணிக்கையினை ஒரு மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சாகர்மாலா மற்றும் விக்ஸித் பாரத் 2047 முன்னெடுப்புகளின் கீழ் இந்திய மற்றும் ஆசியான் நாடுகளின் சில துறைமுகங்களை இணைக்கும் ஒருங்கிணைந்தக் கப்பல் போக்குவரத்து வலையமைப்பு உருவாக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.