TNPSC Thervupettagam

ஆசியான்-இந்தியா பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு

November 19 , 2026 13 hrs 0 min 42 0
  • பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 23-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பேரிடர் மேலாண்மை குறித்த கூட்டு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • செயற்கைக்கோள் மற்றும் வானிலை தரவுப் பகிர்வு மற்றும் கூட்டுத் தயார்நிலை பயிற்சிகள் மூலம் நிலநடுக்கங்கள், சுனாமிகள், வெள்ளம், புயல்கள் மற்றும் நிலச்சரிவுகளுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
  • பேரிடர்-இடர் மதிப்பீடு, முன்னெச்சரிக்கைகள் மற்றும் அவசரகால பதிலளிப்பிற்காக செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் பெருந்தரவுப் பகுப்பாய்வு (big data analytics) ஆகியவற்றைப் பயன்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
  • இந்த ஒருங்கிணைப்பில் ஆசியான் பேரிடர் மேலாண்மை குழு (ACDM), மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒருங்கிணைப்பு மையம் (AHA Centre) மற்றும் இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆகியவை ஈடுபடும்.
  • 2026–2030 ஆம் ஆண்டுச் செயல் திட்டத்தின் கீழ் பேரிடர் தடுப்பு, தயார்நிலை, பதிலளிப்பு மற்றும் மீட்பு ஆகியவற்றை இந்த ஒத்துழைப்பு உள்ளடக்கும்.
  • 2005-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால பதிலளிப்புக்கான ஆசியான் ஒப்பந்தம் (AADMER), சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஒரு பிராந்தியக் கட்டமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்