ஆசியாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் குழுமங்கள்
June 23 , 2026 8 days 124 0
'உலகளாவிய புத்தொழில் குழும சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை (GSER) 2026'-இல் ஆசியாவின் இரண்டாவது சிறந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் குழுமங்களின் மையமாக பெங்களூரு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற VivaTech 2026 நிகழ்வில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் சிறந்த 40 புத்தொழில் குழும சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெங்களூரு உலகளவில் 15-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிக தரவரிசை பெற்ற புத்தொழில் குழும சுற்றுச்சூழல் அமைப்பாக பெங்களூரு உள்ளதுடன் இது ஆசியாவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நகரம் செயல்திறன் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) இரண்டிலும் 10க்கு 9 மதிப்பெண்களையும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரிவில் 8 மதிப்பெண்களையும், நிதியுதவி மற்றும் சந்தை விரிவாக்கத்தில் 7 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் AI புத்தொழில் குழும நிதியுதவியில் 58 சதவீதத்தை பெங்களூரு ஈர்க்கிறது என்பதோடு மேலும் 2020 ஆம் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் குழுமங்களுக்காக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியுள்ளது என்ற நிலையில் இதில் பயன்பாட்டு அடுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் குழுமங்களுக்கான 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான நிதியும் அடங்கும்.
பெங்களூருவின் புத்தொழில் குழும சுற்றுச்சூழல் அமைப்பு 153 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது மற்றும் 30 செயலில் உள்ள யூனிகார்ன்களைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது உலகளாவிய சராசரியான 11 யூனிகார்ன்களை விட மிக அதிகம் ஆகும்.