TNPSC Thervupettagam

ஆசியாவின் பருவநிலை 2023

April 29 , 2024 18 days 112 0
  • உலக வானிலை அமைப்பு ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஆசியாவின் பருவநிலை’ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஆசிய கண்டம் ஆனது அதன் நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவிலான வெப்ப நிலை மற்றும் மழைப்பொழிவுகளினால் வெள்ளப்பெருக்கு மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிரப் பருவநிலை நிகழ்வுகளுடன் போராடி வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டானது உலகளவில் பதிவாகியதில் மிகவும் வெப்பமான ஆண்டு ஆக பதிவானது.
  • 2023 ஆம் ஆண்டில் ஆசியா முழுவதும் தீவிர பருவநிலை நிகழ்வுகளால் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
  • இந்த நிகழ்வுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை புயல் மற்றும் வெள்ளம் தொடர்பானவையாகும்.
  • இந்தியாவில், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளால் சுமார் 110 பேர் அதிவெப்ப தாக்கத்தினால் உயிரிழந்தனர்.
  • பெய்ஜிங் ஆய்வகத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 41.1 டிகிரி செல்சியஸ் ஆகும் என்ற நிலையில் இது 1951 ஆம் ஆண்டில் இந்தப் பதிவுகள் தொடங்கியதிலிருந்து பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும்.
  • ஜப்பான் நாட்டிலும் 1898 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக வெப்பமான கோடை காலம் பதிவானது.
  • ஹாங்காங் ஆய்வகத்தின் தலைமையகத்தில் செப்டம்பர் 07 ஆம் தேதியன்று ஒரு மணி நேரத்திற்கு 158.1 மிமீ என்ற அளவில் மழைப் பொழிவு பதிவானது என்ற நிலையில் இது 1884 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து பதிவான அதிக பட்ச மழைப்பொழிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்