TNPSC Thervupettagam

ஆசியாவின் பழமையான மூங்கில்

October 21 , 2019 2092 days 784 0
  • அசாமில் உள்ள மக்கம் நிலக்கரிப் பகுதியில் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி 49,000க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பதிவாகியுள்ள நிலையில், உலகின் அனைத்துத் தாவரங்களிலும் சுமார் 11.5% இந்தியாவில் உள்ளது.
  • இப்போது, ஒரு புதிய புதைபடிவ பதிவானது, ஆசிய மூங்கில்களின் பிறப்பிடமாக இந்தியா இருப்பதைக் காட்டுகிறது. அவை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் வடகிழக்கு பகுதியில் உருவாக்கப்பட்டன.
  • இவை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒலிகோசீன் என்ற காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.
  • இப்போது சீனாவின் யுன்னான் மாகாணம் மூங்கில்களில் மிக அதிகமான பன்முகத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த பிராந்தியத்தில் கிடைக்கப் பெற்ற மிகப் பழமையான புதைபடிவமானது 20 மில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளது.
  • இதன் மூலமாக ஆசிய மூங்கில்கள் இந்தியாவில் தோன்றியவை என்றும் பின்னர் அவை அங்கு (சீனாவிற்கு) பரப்பப் பட்டுள்ளன என்றும் தெளிவாகத் தெரிகிறது.
  • இந்த கண்டுபிடிப்பு ஆசியாவிற்கு மூங்கில் வந்தது ஐரோப்பாவிலிருந்து அல்ல, மாறாக அது  இந்தியாவிலிருந்து வந்தது என்ற கோட்பாட்டை மேலும் பலப்படுத்துகிறது.
  • ஐரோப்பிய மூங்கில் புதைபடிவம் சுமார் 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.
  • இந்தியாவில் மூங்கில் புதைபடிவங்கள் மிகவும் பொதுவானவை அல்ல. ஏனெனில் அவை இமயமலையில் உள்ள சிவாலிக் வண்டல்களில் இருந்து மட்டுமே அறியப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்