ஆசியாவின் முதலாவது கலப்பினத் தன்மை கொண்ட பறக்கும் மகிழுந்து (கார்)
September 23 , 2021 1431 days 642 0
மத்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆசியாவின் முதலாவது கலப்பினத் தன்மையுடைய பறக்கும் மகிழுந்தின் மாதிரியினை ஆய்வு செய்தார்.
இந்தப் பறக்கும் கார்கள், மக்கள் மற்றும் சரக்குப் பொருட்களின் போக்குவரத்திற்கும் மருத்துவ அவசரநிலைகளுக்கும் பயன்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.
இந்தக் கார் இரு பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய முழு சுயச்சார்புடைய கலப்பின மின்சார VTOL (vertical take-off and landing) வாகனமாக இருக்கும்.
இது சென்னையிலுள்ள வினாதா ஏரோ மொபிலிட்டி என்ற ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வருகிறது.