ஆசியாவில் போக்குவரத்தைக் கார்பன் நீக்கம் செய்தல் - NDC-TIA II
November 20 , 2026 11 hrs 0 min 37 0
ஆசியாவிற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு–போக்குவரத்து முன்னெடுப்பின் (NDC-TIA II) இரண்டாம் கட்டத்தின் கீழ், நிதி ஆயோக் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு நிறுவனமான GIZ (Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit) ஆகியவை ஓர் அமலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
NDC-TIA II என்பது ஆசியாவில் குறைந்த கார்பன் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக ஜெர்மனியின் சர்வதேச பருவநிலை முன்னெடுப்பால் (IKI) நிதியளிக்கப்படும் ஒரு பிராந்திய ஒத்துழைப்புத் திட்டமாகும்.
இது இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கவனம் செலுத்துவதோடு, மின்சார இயக்கத்தின் மூலம் போக்குவரத்து உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் முதலாம் கட்டம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 2028 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடரும்.
இந்த முன்னெடுப்பு மின்சார சரக்கு வாகனங்கள், அதிவேக மின்னேற்ற நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் பசுமை நிதியுதவி ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.