ஆசிரியர் கல்வி மீதான சர்வதேசக் கருத்தரங்கு – புது தில்லி
August 20 , 2019 2315 days 782 0
மத்திய மனித வள மேம்பாடுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆசிரியர் கல்வி மீதான சர்வதேசக் கருத்தரங்கை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடைபெறக் கூடிய இந்தக் கருத்தரங்கானது தேசிய ஆசிரியர் கல்வி ஆணையத்தால் (NCTE - National Council of Teacher Education) ஒருங்கிணைக்கப் படுகின்றது. இது 1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இக்கருத்தரங்கை இது ஒருங்கிணைக்கின்றது.
ஆசிரியர் கல்வியின் மதிப்பீடுகள் மற்றும் தரங்களின் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்காக NCTE ஆனது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு ஆலோசனை வழங்கும் ஆணையமாகப் பணியாற்றுகின்றது.