TNPSC Thervupettagam

ஆஜீவிகா திட்டம் (கிராமியம்) மசோதா, 2025

December 20 , 2025 14 hrs 0 min 11 0
  • இந்த மசோதாவானது, சுமார் இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக முன் வைக்கப்பட்டுள்ளது.
  • விக்ஸித் பாரத் 2047 (வளர்ச்சி பெற்ற இந்தியா) தொலைநோக்குக் கொள்கையுடன் ஒருங்கிணைந்த நவீன காலச் சட்டத்தை உருவாக்குவதற்காக மத்திய வேளாண்துறை அமைச்சரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • திறம் சாரா உடல் உழைப்பைச் செய்யும் வயது வந்தோருக்கு, கிராமப்புறக் குடும்பத்திற்கு வழங்கப்படும் உத்தரவாதமான கூலி சார் வேலைவாய்ப்பு ஆனது 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது.
  • MGNREGA திட்டத்தின் கீழ், இந்தச் சட்டம் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கிறது, மேலும் வறட்சியின் போது அல்லது சில பழங்குடிப் பகுதிகளுக்கு மட்டுமே கூடுதல் நாட்கள் அனுமதிக்கப்பட்டன.
  • இந்த மசோதா முக்கிய விதைப்பு காலம் மற்றும் அறுவடைக் காலங்களில் 60 நாட்கள் அளவிலான வேளாண் நடவடிக்கை இடைநிறுத்தத்தை அறிமுகப்படுத்துகிறது.
  • வேளாண்சார் இடைநிறுத்தத்தின் நோக்கம் வேளாண் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர் வளம் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
  • MGNREGA திட்டத்தின் கீழ், மத்திய அரசு 100 சதவீத திறம் சாரா கூலியையும், 75 சதவீதப் பொருள் செலவுகளையும் செலுத்தியது, இதன் விளைவாக 90:10 பங்கிலான மத்திய - மாநில நிதி முறை உருவானது.
  • புதிய திட்டம் வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 பங்கிலான நிதி உதவியுடன், பிற மாநிலங்களுக்கு 60:40 நிதியுதவியுடன், சட்டமன்றங்கள் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களுக்கு 100 சதவீத மத்திய அரசின் நிதியுதவியுடன் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாக (CSS) செயல்படுகிறது.
  • தேவை அடிப்படையிலான, பொதுவான MGNREGA, தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க அனுமதித்தது.
  • புதிய மசோதா, அதன் அமலாக்கத்திற்காக ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட கிராமப்புறப் பகுதிகளை மத்திய அரசு அறிவிக்க அனுமதிக்கிறது.
  • இந்த மசோதா, விக்ஸித் பாரத் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அடுக்கை உருவாக்குவதை கட்டாயமாக்குகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்துப் பணிகளும் இந்த ஒற்றைத் தேசிய உள் கட்டமைப்பு கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்படும்.
  • இந்தக் கட்டமைப்பு விக்சித் கிராமப் பஞ்சாயத்து திட்டங்களை பிரதான் மந்திரி (பிரதமர்) கதி சக்தி தேசிய பெருந்திட்டத்துடன் ஒருங்கிணைக்கிறது.
  • பணிகள் ஆனது நீர்ப் பாதுகாப்பு, முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் பேரிடர் தணிப்பு ஆகிய நான்கு பகுதிகளாக தொகுக்கப் பட்டுள்ளன.
  • இந்த மசோதா தொழிலாளர்களுக்கு உயிரியளவியல் சார் வருகைப் பதிவை கட்டாயமாக்குகிறது.
  • இது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மோசடி கண்டறிதல், புவியிடங் காட்டி அமைப்பு (GPS) சார்ந்த பணியிடக் கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் தரவை வாராந்திர அடிப்படையில் வெளியிடுதல் ஆகியவற்றையும் சட்டப்படியாக கட்டாயம் ஆக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்