TNPSC Thervupettagam
December 8 , 2025 4 days 69 0
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) அறிவியலாளர்கள் தகவமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க சடுதி மாற்றத்தினை/பிறழ்வு உருவாக்கத்தைப் பயன்படுத்தி ஆடம் சினி அரிசியை மேம்படுத்தியுள்ளனர்.
  • ஆடம் சினி அரிசி என்பது ஒரு நறுமணம் கொண்ட கருப்பு அரிசி வகையாகும் என்ற நிலையில் இது பிரதானமாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் சந்தௌலி, வாரணாசி மற்றும் விந்தியப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
  • இது 2023 ஆம் ஆண்டில் புவி சார் குறியீட்டினை (GI) பெற்றது.
  • அசல் வகையானது சர்க்கரை-படிகம் போன்ற மணிகளைக் கொண்டுள்ளது என்ற நிலையில் 165 செ.மீ வரை வளரும் இந்த அரிசி, 155 நாட்களில் முதிர்வடையும் என்பதோடு மேலும் இது ஹெக்டேருக்கு 20–23 குவிண்டால் மகசூலையும் அளிக்கிறது.
  • அதே நறுமணம் தக்க வைக்கப் பட்ட மேம்படுத்தப்பட்ட வகைகளானது தற்போது குறைந்த உயரம் (105 செ.மீ), முன் கூட்டிய முதிர்வு (120 நாட்கள்) மற்றும் அதிக மகசூல் (ஹெக்டேருக்கு 30–35 குவிண்டால்) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்