2018 ஆம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதியன்று, தேசியத் தலைநகரான தில்லியில் 15 நாள் ஆடி மகோத்சவ திருவிழா துவங்கியது.
இவ்வருடத்தின் விழாவிற்கான கருத்துரு “பழங்குடியினர் கலாச்சாரம், கைவினைப் பொருட்கள், சமையற்கலை மற்றும் வர்த்தகம் ஆகிய உணர்வுகளைக் கொண்டாடுதல்” என்பதாகும்.
டெல்லி ஹாத் மற்றும் மத்தியப் பூங்கா என இத்திருவிழாவிற்கு என்று புதுதில்லியில் மொத்தம் இரண்டு இடங்கள் இருக்கின்றன.
பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், துணி, நகை ஆகிய பொருட்களின் விற்பனைக் கூடமாகவும் கண்காட்சிக் கூடமாகவும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட அளவில் இத்திருவிழா காட்சிக் கூடங்களைக் கொண்டிருக்கும்.