TNPSC Thervupettagam

ஆணையர் அலுவலக அமைப்பு முறை

January 19 , 2020 2036 days 798 0
  • முன்னதாக கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே காவல்துறை ஆணையம் இருந்தது.
  • இப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ மற்றும் நொய்டா ஆகிய இடங்களிலும் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.
  • ஆணையர் அலுவலக அமைப்பில், ஒருங்கிணைந்த காவல்துறைக் கட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற காவல்துறை ஆணையர் ஆனவர் நகரத்தில் உள்ள அனைத்துக் காவல் படைகளுக்கும் பொறுப்பானவர் ஆவார். அவர் மாநில அரசிற்குப் பதில் அளிக்கக் கூடியவர் ஆவார்.
  • இந்த அமைப்பானது காவல்துறை ஆணையர்களாக நியமிக்கப்பட்ட பொதுக் காவல் ஆய்வாளரான (Inspector General of Police) ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு (இந்தியக் காவல் பணி) மாவட்ட ஆட்சியருக்கு உரிய அதிகாரங்கள் உட்பட கூடுதல் பொறுப்புகளையும் வழங்குகின்றது.

நடைமுறை

  • காவல்துறை என்பது 1861 ஆம் ஆண்டின் காவல்துறைச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • காலனித்துவ அமைப்பின் கீழ், ஒரு மாவட்டம் அல்லது பிராந்தியத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக மாவட்ட ஆட்சியர் இருந்தார்; காவல்துறைக் கண்காணிப்பாளர் அவருக்கு அறிக்கை அளித்தார்.
  • ஆனால் ஆணையர் அலுவலக அமைப்பின் கீழ், ஆணையர் ஆனவர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டியது இல்லை.
  • அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ், ‘காவல்துறை என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. அதாவது தனிப்பட்ட மாநில அரசுகளானவை பொதுவாக இந்த விஷயம் குறித்து சட்டமியற்றவும் அதனைக் கட்டுப்படுத்தவும் அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளன.
  • மாவட்ட அளவில் “இரட்டை அமைப்பு முறைக் கட்டுப்பாடு” நடைமுறையில் உள்ளது. இதில் காவல்துறை நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருடன் இணைந்துப் பணியாற்ற வேண்டும்.
  • பெருநகர மட்டத்தில், இரட்டை அமைப்பினைக் கொண்ட பல மாநிலங்கள் ஆணையர் அலுவலக அமைப்பு முறைக்கு மாறியுள்ளன. ஏனெனில் சிக்கலான நகர்ப்புற மையப்படுத்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு விரைவான முடிவெடுப்பதை இந்தப் புதிய நடைமுறையானது அனுமதிக்கின்றது.

எங்கே

  • பீகார், மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஆணையர் அலுவலக அமைப்பு முறையைக் கொண்டுள்ளன.
  • ஆங்கிலேயர்கள் இந்த முறையை முதன்முதலில் கொல்கத்தாவில் அறிமுகப் படுத்தினர். பின்னர் மும்பை மற்றும் சென்னை மாகாணங்களில் பின்பற்றினர்.
  • பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆட்சியின் போது தில்லி அரசாங்கமும் ஆணையர் அலுவலக அமைப்பு முறைக்கு மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்