ஆண்ட்ராய்டு சார்ந்த திறன்பேசிகளுக்கான ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை கூகிள் உருவாக்கியுள்ளது.
இது ஆண்ட்ராய்டு சார்ந்த திறன்பேசிகளில் கட்டமைக்கப்பட்ட முடுக்கமானிகளைப் பயன்படுத்தி நிலநடுக்கங்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவு தரும் துருக்கி நில நடுக்கங்களின் போது இது சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள எச்சரிக்கைகளை வழங்கத் தவறிவிட்டது.
கூகிள் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இரண்டு வகையான எச்சரிக்கைகளை அனுப்புகிறது
லேசான நிலநடுக்கங்களுக்கு (ரிக்டர் அளவு 4.5+) விழிப்புடன் இருங்கள் எனும் எச்சரிக்கைகள்
வலுவான நிலநடுக்கங்களுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எச்சரிக்கைகள்.