TNPSC Thervupettagam

ஆண்ட்ரோத் கப்பல்

September 18 , 2025 27 days 73 0
  • இந்தியக் கடற்படையானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதியன்று, 'ஆண்ட்ரோத்' என்று பெயரிடப்பட்ட குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பலை (ASW-SWC) பெற்றது.
  • இந்தக் கப்பலானது கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டது.
  • தோராயமாக 77 மீட்டர் நீளம் கொண்ட 'ஆண்ட்ரோத்' டீசல் எஞ்சின்-வாட்டர்ஜெட் எஞ்சின் கலவையால் இயக்கப் படும் மிகப்பெரிய இந்தியக் கடற்படை போர்க் கப்பல் ஆகும்.
  • இந்தக் கப்பலானது, கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் திறன் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துகிறது.
  • 'ஆண்ட்ரோத்' என்ற பெயரானது லட்சத்தீவு தீவுக் கூட்டத்தில் உள்ள ஆண்ட்ரோத் தீவிலிருந்து பெறப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்