நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யும் 15 வயதிற்கு குறைந்த மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பயணத்திற்கான ஆவணமாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகமானது அறிவித்துள்ளது.
இருப்பினும் 15 வயது முதல் 65 வயது வரையிலான இந்தியர்கள் ஆதார் அட்டையினைப் பயண ஆவணமாகப் பயன்படுத்தி இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியாது.
முன்னதாக 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 15 வயதிற்குட்பட்டோர் தங்கள் ஆதார் அட்டையைத் தவிர நிரந்தர கணக்கு அட்டை (PAN – Permanent Account Number), ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றை தங்களது அடையாள அட்டையாக காட்ட இயலும்.