TNPSC Thervupettagam

ஆதார் செல்லுபடியாகத் தக்க பயண ஆவணம்

January 22 , 2019 2386 days 726 0
  • நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யும் 15 வயதிற்கு குறைந்த மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பயணத்திற்கான ஆவணமாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகமானது அறிவித்துள்ளது.
  • இருப்பினும் 15 வயது முதல் 65 வயது வரையிலான இந்தியர்கள் ஆதார் அட்டையினைப் பயண ஆவணமாகப் பயன்படுத்தி இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியாது.
  • முன்னதாக 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 15 வயதிற்குட்பட்டோர் தங்கள் ஆதார் அட்டையைத் தவிர நிரந்தர கணக்கு அட்டை (PAN – Permanent Account Number), ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றை தங்களது அடையாள அட்டையாக காட்ட இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்