TNPSC Thervupettagam

ஆதார் டிஜிட்டல் ஆளுகை முன்னெடுப்பு

October 6 , 2026 5 days 73 0
  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 17வது ஆதார் தினத்தைக் குறிக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆதார் சம்வாத் நிகழ்ச்சியில் ஐந்து டிஜிட்டல் அடையாள முன்னெடுப்புகளைத் தொடங்கியது.
  • மின்னணு பொது விநியோக முறைக்கான (ePDS) முக அங்கீகாரம் UIDAI, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவற்றால் கூட்டாகத் தொடங்கப்பட்டது.
  • குறைந்த அளவிலான தேவைகளைக் கொண்ட தகுதியான நிறுவனங்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை ஆதரிப்பதற்காக SWIK இணையதளம் 2.0 மற்றும் துணை-AUA/துணை-KUA (LITE) கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டன.
  • UIDAI அலுவலகங்களுக்கு வரும் குடியிருப்பாளர்களுக்காக ஒரு டோக்கன்/ அடையாளக்குறியீட்டு மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டது, அதே நேரத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் இப்போது 13 மொழிகளை ஆதரிக்கிறது.
  • ஆதார் என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் UIDAI வழங்கும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்