TNPSC Thervupettagam

ஆதார் நிலை குறித்த அறிக்கை

January 9 , 2020 2048 days 788 0
  • ஆதார் தொடங்கப்பட்டு, தற்பொழுது பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆதார் நிலை குறித்த ஒரு அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவின் ஐடின்சைட் மற்றும் ஓமிடியார் என்ற அமைப்பினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • ஆதாரின் 80% பங்கேற்பாளர்கள் ஆதார் ஆனது அரசாங்கத் திட்டங்கள் மற்றும் சேவைகளை விரைவாகச்  செயல்படுத்தியதாக உணர்ந்துள்ளார்கள் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • ஆதார் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆதார் ஆனது உலகின் ஒரு மிகப்பெரிய பயோ மெட்ரிக் அடையாள அமைப்பாக விளங்குகின்றது.

ஆதார்

  • ஆதார் எண் என்பது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தினால் (Unique Identification Authority of India- UIDAI) வழங்கப்படும் ஒரு சரி பார்க்கக் கூடிய பன்னிரண்டு இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும்.
  • இது குடியிருப்பாளரின் மக்கள்தொகை விவரங்கள் மற்றும் உயிர்த்தரவு அல்லது பயோமெட்ரிக் தகவல் ஆகியவற்றுடன் இணைக்கப் பட்டுள்ளது.
  • ஆதார் திட்டமானது 2006 ஆம் ஆண்டில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு,  2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. UIDAI ஆனது 2009 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்