TNPSC Thervupettagam

ஆதார் மசோதா

July 12 , 2019 2132 days 872 0
  • 2019 ஆம் ஆண்டின் ஆதார் மற்றும் இதர சட்டங்களின் திருத்தத்திற்கான மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் 2019 ஆம் ஆண்டு ஜூலை 08 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • இந்த திருத்தங்களானது நீதிபதி N. ஸ்ரீ கிருஷ்ணா குழுவின் ஆதார் மீதான திருத்தங்களுக்கான பரிந்துரைகளின் அடிப்படையிலும் தனியுரிமை (அந்தரங்க உரிமை) மீதான உச்சநீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இது கீழ்க்காணும் சட்டங்களில் திருத்தம் செய்கின்றது.
    • ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளின் இலக்கு நோக்கிய விநியோகம்) சட்டம் – 2016
    • இந்திய தந்திச் சட்டம் – 1885
    • பண மோசடி தடுப்புச் சட்டம் – 2002
முக்கிய திருத்தங்கள்
  • நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தால் அனுமதிக்கப் படாவிடில் எந்தவொரு நபரும் ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்கவோ அல்லது தனது அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கத்திற்காக சோதனையை ஏற்கவோ கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்.
  • வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கு தன்னார்வ அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய KYC (Know Your Customer) ஆவணமாக ஆதார் எண்ணைப் பயன்படுத்த இது அனுமதிக்கின்றது.
  • இது குழந்தைகள் 18 வயதை எட்டும் போது பயோ மெட்ரிக் (உடல் அங்கங்கள்) அடையாளத் திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத் தெரிவை வழங்குகின்றது.
  • ஆதார் உறுதிச் சோதனை மறுப்பு அல்லது உறுதி செய்ய முடியாமல் போனதற்காக சேவைகளை வழங்க மறுப்பதை இது தடை செய்கிறது.
  • இது இந்திய தனித்துவ அடையாள ஆணைய நிதியம் நிறுவப்படுவதற்கு வழி வகுக்கின்றது.
  • இது குடிமை அபராதங்கள், அதன் தீர்ப்புகள், ஆதார் சட்டத்தின் மீறல்கள் தொடர்பான மேல்முறையீடு மற்றும் ஆதார் சூழல் அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கான விதிகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்