இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது ஆதார் மித்ரா எனப்படும் புத்தம் புதிய செயற்கை நுண்ணறிவு/எந்திரவியல் கற்றலுக்கான இணையவழி உரையாடல் நிரலினை அறிமுகப்படுத்தியது.
குடிமக்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இணையவழி உரையாடல் நிரல் இயக்கப்படும்.
பார்வையாளர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்திற்காக வேண்டி, குறிப்பிட்ட சில கருத்துருக்களுடன் தொடர்புடைய ஒளிப்படங்களைக் காணும் வசதியையும் இது வழங்குகிறது.