TNPSC Thervupettagam

ஆதி கர்மயோகி அபியான்

September 23 , 2025 4 days 48 0
  • பிரதமர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
  • இது மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியிலிருந்து தொடங்கப்பட்ட உலகின் மிகப் பெரியப் பழங்குடியின அடிமட்ட தலைமைத்துவத் திட்டமாகும்.
  • ஆதி கர்மயோகி அபியான் என்பது ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் திட்டத்தின் கீழ் பழங்குடியின விவகார அமைச்சகத்தினால் வழிநடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது, 30 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 1 லட்சம் கிராமங்களில் 11 கோடி பழங்குடியின குடிமக்களுக்குப் பயன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02 ஆம் தேதி வரையிலான ஆதி சேவா பர்வ் காலத்தில் நடத்தப்படுகிறது.
  • இது சேவா (சேவை), சமர்ப்பன் (அர்ப்பணிப்பு) மற்றும் சங்கல்ப் (தீர்மானம்) மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடிய நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது.
  • சுமார் 20 லட்சம் அதிகாரிகள், சுய உதவிக்குழு மகளிர் மற்றும் பழங்குடியின இளையோர்கள் ஆதி கர்மயோகிகளாக பயிற்சி பெற்றனர்.
  • 1 லட்சம் கிராமங்கள் ஒவ்வொன்றும் 2030 ஆம் ஆண்டிற்கான தொலைநோக்கு திட்டங்கள் கொண்ட ஒரு பழங்குடியின கிராமத்திற்கான ஆவணத்தைத் தயாரிக்கும்.
  • தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் 2.0 மற்றும் பிரதமர் ஜன்மான் போன்ற திட்டங்களுடன் இணைக்கப்பட்ட கிராம செயல் திட்டங்கள் உருவாக்கப் படும்.
  • ஒவ்வொரு கிராமமும் ஒற்றைச் சாளர சேவை மையமாக ஓர் ஆதி சேவா கேந்திராவை நிறுவும்.
  • குடியிருப்பாளர்கள் வாராந்திர அளவிலான ஆதி சேவா சமய் எனும் ஒரு மணி நேரத் தன்னார்வச் சேவைக்குப் பங்களிப்பார்கள்.
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக நிறுவனங்கள், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் ஆதி கர்மயோகி மாணவர் பிரிவுகள் அமைக்கப்படும்.
  • ஆதி கர்மயோகி சான்றிதழளிப்புத் திட்டம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்ற இளம் நிபுணர்களை ஈடுபடுத்தும்.
  • இந்தத் திட்டமானது துறைசார் வளங்களை ஒருங்கிணைப்பதையும் மேம்பாட்டில் சமூகக் கூட்டாண்மையையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதும் 550 மாவட்டங்களிலும் 3000 தொகுதிகளிலும் பலனளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்