பழங்குடியின விவகாரத் துறை அமைச்சகமானது, ஆதி கர்மயோகி (பீட்டா வடிவம்) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பழங்குடியினர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான உந்துதலைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை உள்ளடக்கிய மிகவும் வலுவான குழுவை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கள அளவிலான அதிகாரிகளின் மனநிலையையும், ஒரு உந்துதலையும் மாற்றுவதில் இதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டமானது குடிமக்களை மையமாகக் கொண்ட கருத்தாக்கங்கள் மற்றும் சேவை வழங்கலை ஊக்குவிக்கிறது.
நாடு முழுவதும் 1 லட்சம் பழங்குடியின கிராமங்கள் மற்றும் வாழ்விடங்களில் சேவை வழங்கலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ் சுமார் 20 லட்சம் பங்குதாரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படும்.
சுமார் 180க்கும் மேற்பட்ட மாநில அளவு முதன்மைப் பயிற்சியாளர்கள், 3,000 மாவட்டப் பயிற்சியாளர்கள் மற்றும் 15,000 தொகுதிப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப் படும்.