பழங்குடியின விவகார அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று ஆதி சமஸ்கிருத டிஜிட்டல் கற்றல் தளத்தின் பீட்டா வடிவினை அறிமுகப் படுத்தியது.
ஆதி சமஸ்கிருதம் ஆனது பழங்குடியினரின் கலை வடிவங்களைப் பாதுகாத்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உலகளவில் பழங்குடியின சமூகங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தளமானது பழங்குடியினக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்று விவரிக்கப் படுகிறது.
ஆதி சமஸ்கிருதம் ஆதி விஸ்வ வித்யாலயா, ஆதி சம்பதா மற்றும் ஆதி ஹாத் எனப்படும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
ஆதி விஸ்வ வித்யாலயா பழங்குடியினர் நடனம், ஓவியம், இசை, கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் 45 உள்ளார்ந்தப் படிப்புகளை வழங்குகிறது.
ஆதி சம்பதா என்பது பழங்குடியினரின் கலை, ஜவுளி, கலைப் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய 5,000 க்கும் மேற்பட்ட தொகுக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்ட ஒரு டிஜிட்டல் களஞ்சியமாகும்.
ஆதி ஹாத் என்பது பழங்குடியினரின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) உடன் இணைக்கப்பட்ட ஒரு இணைய வணிக தளமாகும்.
இந்த முன்னெடுப்பு ஆனது 15 மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் (TRI) இணைந்து உருவாக்கப்படுகிறது.