August 19 , 2019
2100 days
823
- ஆதி மகோத்சவ் அல்லது தேசியப் பழங்குடியினர் திருவிழாவானது லே-லடாக்கின் போலோ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
- இது லடாக்கில் பழங்குடியினரின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது லடாக்கில் முதல் முறையாக நடைபெறவுள்ளது.
- இது மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் கூட்டு முயற்சியாகும்.
- இத்திருவிழாவின் கருத்துரு : “பழங்குடியினரின் கைவினை, கலாச்சாரம் மற்றும் வர்த்தக மகத்துவத்தின் கொண்டாட்டம்” என்பதாகும்.
- லடாக் பகுதியானது பாஷ்மினா சால்வைகள் மற்றும் வாதுமைப் பழங்களுக்கு மிகவும் பிரபலமானதாகும்.
Post Views:
823