ஆதிச்சநல்லூர் தொல்பொருள் தளத்திற்கு அருகில் அல்லது கிராமத்திற்குள் மணல் அகழ்வு அனுமதிக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்தது.
2016 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்து ஓர் ஈராயம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த மனுவானது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் இரும்புக் காலப் புதைவிடத்திற்கு அருகில் மணல் அகழ்வு மேற்கொள்வது தொடர்பானதாகும்.
வேலி அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சித் தளத்தில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
ஆதிச்சநல்லூர் கிராமத்தில் மணல் அள்ளுதல் அல்லது குவாரி உரிமம் வழங்கப்படவில்லை.