ஆத்மநிர்பர் பாரத் அரைஸ் (ARISE) – அடல் புதிய இந்தியா சவால்கள்
September 15 , 2020 1807 days 740 0
இந்தத் திட்டமானது இந்திய எம்எஸ்எம்இ மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஏற்படுத்த முயலுகின்றது.
இந்த முன்னெப்பானது எம்எஸ்எம்இ (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை) துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான புத்தாக்கங்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்த உதவவுள்ளது.
இந்தத் திட்டமானது பின்வரும் 4 அமைச்சகங்கள் மற்றும் இஸ்ரோவினால் செயல்படுத்தப்படவுள்ளது. அவையாவன:
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்