TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மேலவை கலைப்பு

January 30 , 2020 1917 days 1634 0
  • ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் கீழ் அவையானது அம்மாநிலத்தின் மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
  • ஆந்திர மாநில அரசு இந்தத் தீர்மானத்தை அந்த மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • 1958 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மேலவையானது 1985 ஆம் ஆண்டில் கலைக்கப் பட்டது. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மேலவையானது மீண்டும் ஏற்படுத்தப் பட்டது.
  • சரத்து 169ன் படி, சட்ட மேலவை கலைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்ற கீழவையானது சிறப்புப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், பாராளுமன்றமானது ஒரு சாதாரண பெரும்பான்மை மூலம் அம்மாநிலத்தின்  சட்ட மேலவையை (அது ஏற்கனவே இருந்தால்) கலைக்கலாம் அல்லது அதை (அது இல்லாத சமயத்தில்) உருவாக்கலாம்.
  • ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை சட்டமன்ற மேலவைகளைக் கொண்ட மற்ற மாநிலங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்