TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தின் நிரந்தரத் தலைநகரம் – அமராவதி

April 4 , 2026 2 days 41 0
  • அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே தலைநகராக அறிவிக்க ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2026 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா, ஜூன் 2, 2024 முதல் அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அறிவிக்கிறது.
  • ஏப்ரல் 1, 2026 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவைக்கும் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்படும்.
  • இது தலைநகர் குறித்த முடிவிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதோடு, எதிர்காலத்தில் இந்த முடிவை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் தடுக்கிறது.
  • மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
  • முன்னதாக, ஓய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மூன்று தலைநகரங்கள் மாதிரியை (விசாகப் பட்டினம் – நிர்வாகத் தலைநகரம், அமராவதி – சட்டமன்றத் தலைநகரம், கர்னூல் – நீதித்துறைத் தலைநகரம்) முன்மொழிந்திருந்தார்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு மாநிலத்தின் தலைநகராக நாடாளுமன்றம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் முதல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • இந்தத் திருத்தம் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014-இல் மாற்றங்களைக் கொண்டு வருகிறது; அந்தச் சட்டத்தின்படி ஐதராபாத் 10 ஆண்டுகளுக்குத் தற்காலிக கூட்டுத் தலைநகராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்