ஆந்திரப் பிரதேசத்தின் நிரந்தரத் தலைநகரம் – அமராவதி
April 4 , 2026 137 days 231 0
அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே தலைநகராக அறிவிக்க ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2026 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, ஜூன் 2, 2024 முதல் அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அறிவிக்கிறது.
ஏப்ரல் 1, 2026 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவைக்கும் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்படும்.
இது தலைநகர் குறித்த முடிவிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதோடு, எதிர்காலத்தில் இந்த முடிவை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் தடுக்கிறது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, ஓய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மூன்று தலைநகரங்கள் மாதிரியை (விசாகப் பட்டினம் – நிர்வாகத் தலைநகரம், அமராவதி – சட்டமன்றத் தலைநகரம், கர்னூல் – நீதித்துறைத் தலைநகரம்) முன்மொழிந்திருந்தார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு மாநிலத்தின் தலைநகராக நாடாளுமன்றம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் முதல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தத் திருத்தம் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014-இல் மாற்றங்களைக் கொண்டு வருகிறது; அந்தச் சட்டத்தின்படி ஐதராபாத் 10 ஆண்டுகளுக்குத் தற்காலிக கூட்டுத் தலைநகராக இருந்தது.